முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான் வேட்டை வழக்கில் சல்மான்கான் விடுவிப்பு: ராஜஸ்தான் ஐகோர்ட் தீர்ப்பு

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர்  - மான் வேட்டை வழக்கிலிருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை விடுவித்து ராஜஸ்தான் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியங்கள் சரியாக நிரூபிக்கப்படாததால் சந்தேகத்தின் பலனை அளித்து சல்மான்கானை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இரண்டு மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது காலாவதியான துப்பாக்கி உரிமம் வைத்திருந்ததாக ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2006-ல் கீழ் நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான்கான் தரப்பில் ராஜஸ்தான் ஐகோர்ட் அப்பீல் செய்யப்பட்டது.  இந்த அப்பீல் வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட் மான் வேட்டை வழக்கிலிருந்து பாலிவுட் நடிகர் சல்மான்கானை விடுவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்