முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் கனமழை: 5 லட்சம் பேர் பாதிப்பு

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

கவுஹாத்தி  - அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, 14 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மோரிகான் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் மழை சம்பந்தப்பட்ட விபத்துகளால், 2 பேர் பலியாகினர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், பல்வேறு இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

ஜோர்ஹாட் மாவட்டத்தில் மஜூலியில் மட்டுமே, 100 கிராமங்களில், 51 ஆயிரம் பேர் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளனர். தவிர திப்ருகார், நேமாதிகாட், தேஸ்பூர் மற்றும் துப்ரி ஆகிய பகுதிகளில் பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.  ஜோர்ஹாத், தேமாஜி, பார்பேதா ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாய நிலம், பள்ளிகள், சுகாதாரமையங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தளங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.  மேலும், குறிப்பிட்ட சில இடங்களில் அடுத்த, 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில், 70 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்