முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து மானிய திட்டங்களும் ஆதார் எண்ணுடன் இணைப்பு

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மத்திய அரசின் அனைத்து நல, மானியத் திட்டங்களும் இந்த ஆண்டுக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட உள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது,  “ஊரக வேலை உறுதி திட்டம், காஸ் மானியம் உள்ளிட்ட மத்திய அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் மானிய உதவி திட்டங்கள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். இதையடுத்து, வரும் 2017 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு அனைத்து திட்டங்களுக்கும் டிபிடி முறையில் பணம் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மத்திய அரசு வழங்கும் மானிய நிதியில் முறைகேடு நடப்பதை தடுக்க, நேரடி பணப்பட்டுவாடா முறை கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, நலத்திட்ட உதவி அல்லது மானியத் தொகையானது சம்பந்தப்பட்ட பயனாளிகளின் ஆதார் எண் உதவியுடன் அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும்.

முதல்கட்டமாக, டிபிடி முறை 8 அமைச்சகங்களின் 24 திட்டங் களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது 17 அமைச்சகங்களின் 74 திட்டங்கள் டிபிடி முறையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் நலத்திட்டங்கள் உரியவர்களைச் சென்றடைகிறது. அரசின் மானியச் செலவும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதுவரை டிபிடி முறையின் கீழ், 30 கோடி பயனாளிகளுக்கு ரூ.1.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்