முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் செயல்பாடு : இந்தியா குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - ஒரு சில நாடுகளின் அற்பத்தனமான குறுகியகால கோரிக்கைகளுக்கு எல்லாம் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கமிட்டியின் செயல்பாடு அமைந்துள்ளது என இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைவர் அசாரையும் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கமிட்டியிடம் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் அவருக்கு தடை விதிக்க கூடாது என கமிட்டியிடம் சீனா நிர்ப்பந்தித்தது. இதனால் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட இந்திய ஆலோசகர் அபிஷேக்சிங் ஐ.நாவில் பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது: தீவிரவாதத்தை ஒடுக்கும் விவகாரத்தில் எந்தவொரு விவ காரத்தையும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தீவிரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக் கொள்ளக் கூடாது என்று தான் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கமிட்டி ஒரு சில நாடுகளின் அற்பத்தன மான குறுகிய கால கோரிக்கை களுக்கு எல்லாம் அடிபணிந்து விடுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தீவிரவாத தாக்கு தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது என தெரிவித் துள்ளது.

1990களில் இருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ் தானில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள் தொடர்ந்து இந்தியா வில் தாக்குதலை நடத்தி வருகின் றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களை முறியடிக்கும் நடவடிக்கைகளை இந்தியா திறமையாகவே கையாண்டு வருகிறது. எனினும் சில வெளிநாட்டு தீவிரவாதிகள் தொடர்ந்து எங்கள் நாட்டின் மீது குறி வைத்து வருகின்றனர். எனவே ஐஎஸ் போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. இத்தகைய சூழலில் தீவிரவாத சவால்களை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கமிட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்