முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூதரக அதிகாரிகளின் குழந்தைகள் பாகிஸ்தானில் படிக்க இந்திய அரசு தடை

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பாகிஸ்தானில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் ராஜிய பிரதிநிதிகள் தங்களது குழந்தைகளை அந்த நாட்டில் படிக்க வைக்கக்கூடாது என இந்திய அரசு கூறியுள்ளது. காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான் வானி கடந்த 8ம் தேதி போலீசாரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து  அந்த பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருகின்றன. கடந்த 17நாட்களாக காஷ்மீர் பதட்டத்தில் உள்ளது . 

அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ஈடுள்ளது. தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்ட நாளை கறுப்பு நாளாக அனுசரிப்போம் என்றும் காஷ்மீர்  சுதந்திரத்திற்கு துணை நிற்போம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார் . எங்கள் நாட்டில் தீவிரவாதத்தை தூண்டுவதை நிறுத்துங்கள் என அவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தியும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தார்.

 இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தங்களது குழந்தைகளை அந்த நாட்டு பள்ளியில் படிக்க வைக்க வேண்டாம். வேறு பகுதிகளில்  படிக்க வையுங்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் நேற்று கூறுகையில்,

தங்களது தூதரகங்களின் ஊழியர்கள் மற்றும் கொள்கைகள் குறித்து அனைத்து நாடுகளும் ஆய்வு செய்வது வாடிக்கை . தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் குழந்தைகளை அந்த நாட்டில் படிக்க வைக்கக்கூடாது. பாகிஸ்தானுக்கு வெளியே படிக்க வையுங்கள் என அரசு தெரிவித்துள்ளது. என்றார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பணியாற்றும் இந்திய தூதரகத்தின் அதிகாரிகளின் 50 குழந்தைகள் பாகிஸ்தானில் படிக்கின்றன. அந்த குழந்தைகளை அந்த நாட்டிற்கு வெளியே படிக்க வைக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்