முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாதாரணமான 24 வார கருவை அபார்ஷன் செய்யலாம் : சுப்ரீம் கோர்ட் அனுமதி

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - அசாதாரணமான  24 வார கருவைஅபார்ஷன் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. தாயின் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கும் போதும் அவரை மன நிலையை கருத்தில் கொண்டும் பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பமான தாய் கருவை கலைக்கலாம் என்று கோர்ட் தெரிவித்தது. பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பமான இளம் பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்து தற்போது 24 வார கரு வயிற்றில் வளர்ந்துள்ளது.

இந்த கரு குறைபாடுடன் இருப்பதை கண்டறிந்த மருத்துவ குழு இது குறித்து, கூறுகையில்,  கரு தொடர்ந்து வளர்ந்தால் தாயின் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் இதனால் அவரது மன நிலையிலும் மாற்றம் வரும் என்றும் தெரிவித்தது.  மருத்துவ  குழுவின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் , அசாதாரணமான முறையில் 24 வார கரு வளர்ந்துள்ள நிலையில் தாயின் உடல் நிலை மற்றும் மன நிலையை கருத்தில் கொண்டு கருவை கலைக்கலாம் என தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்