முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரிகள் மட்டுமே அம்மாநில எதிர்காலத்தை முடிவுசெய்ய முடியுமாம்: பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் திமிர் பேச்சு

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - காஷ்மீரிகள் மட்டுமே காஷ்மீரின் எதிர்காலத்தை முடிவுசெய்ய முடியும் என்று பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறிஉள்ளார்.  காஷ்மீர் என்றாவது ஒருநாள், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார்.  இதற்கு பதிலடி கொடுத்த மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்;- காஷ்மீர், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்று நவாஸ் ஷெரீப் கூறி இருப்பது, ஒரு மருட்சியான, ஆபத்தான கனவு. இந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. பயங்கரவாதம் மீதான பாகிஸ்தானின் அபிமானமே இப்படி கூறுவதற்கு காரணம். ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம்.

நீங்கள் இந்த பூலோக சொர்க்கத்தை ஒருபோதும் பயங்கரவாத கூடாரமாக மாற்ற முடியாது, என்றார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை கொடுத்தார். இந்நிலையில் சுஷ்மாவிற்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், காஷ்மீரின் எதிர்காலம் பற்றிய விவகாரத்தில் காஷ்மீரிகள் மட்டுமே தீர்பளிக்க முடியும், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரால் கிடையாது. காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொடுத்து உள்ளது. ஐ.நா. மேற்பார்வையில் சுதந்திரமான மற்றும் நியாயமான பொது வாக்கெடுப்பு மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களை அவர்களுடைய உரிமையை நிலைநாட்ட இந்தியா அனுமதிக்கவேண்டிய உச்சகட்ட நேரம் இதுவாகும்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் தீர்ப்பை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளும், இந்தியாவுடன் இருக்கவேண்டுமா, பாகிஸ்தானுடன் இருக்கவேண்டுமா என்பது அவர்களை சார்ந்தது என்று கூறிஉள்ளார். ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானியை ‘தியாகி’ என்று பாகிஸ்தான் கூறுவதற்கு சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்த விவகாரத்திற்கு பதில் அளித்துள்ள சர்தாஜ் அஜிஸ், ஜம்மு காஷ்மீரில் கடுமையான தடை உத்தரவையும் மீறி பர்கான் வானியின் இறுதி சடங்கில் எத்தனை பேர் கலந்துக் கொண்டனர் என்பதை இந்தியா நிராகரித்துவிட முடியாது என்று கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்