முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்க மருந்து பிரச்சினையில் சதி: சி.பி.ஐ. விசாரணைக்கு மல்யுத்த வீரர் நரசிங் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

 புதுடெல்லி  -  ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற்ற நிலையில் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய மல்யுத்த  வீரர் நரசிங் யாதவ்  எனக்கு எதிராக நடந்த இந்த சதி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.  பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை உலக நாடுகள் கலந்து கொள்ளும் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது.   4ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சர்வதேச விளையாட்டுப்போட்டியில், இந்தியா 120 வீரர்- வீராங்கனைகளுடன் பங்கேற்க இருந்தது. இந்த நிலையில்  ஊக்க மருந்து விவகாரத்தில் மல்யுத்த  வீரர் நரசிங்  சிக்கினார். இதில் சதி நடந்துள்ளது. எனவே .சி.ஐ.டி. அறிக்கைக்கு பதிலாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என நரசிங் தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும்10 நாட்களே உள்ள நிலையில் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கிய நரசிங் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தான் நிரபராதி என்று இந்த இருப்பத்தாறு வயது வீரர் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை முன்பாக  வருகிற புதன் கிழமை வேண்டுகோள் விடுக்கிறார். இதன் மூலம் கமிட்டியை திருப்தி படுத்தி ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும் என்றும் அவர் கருதுகிறார். நரசிங் பங்கேற்க முடியாத நிலையில் இந்திய அணி 119 வீரர்- வீராங்கனைகளுடன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும். ஒலிம்பிக்கில் இரு பதக்கம் பெற்ற சுசில் குமார்  74 கிலோ எடை பிரிவில் ரியோ ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வேண்டும் என உரிமை கோரினார். அதே நேரத்தில் உலக மல்யுத்த  போட்டியில் கடந்த ஆண்டு வெண்கலப்பதக்கம் வென்ற நரசிங்கை ரியோ ஒலிம்பிக்கிற்கு அனுப்ப இந்திய மல்யுத்த  பெடரேஷன் தேர்வு செய்தது.சர்ச்சைக்குரிய நிலையில், நரசிங் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி ரியோ ஒலிம்பிக்கிற்கு செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்