முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதிய உயர்வு வழங்க பரிந்துரை குழு: முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்

திங்கட்கிழமை, 25 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம், சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகளை உயர்த்தி கொடுக்க பரிந்துரை  செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவிற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்படும் என்று சட்டசபையில் நிதிஅமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
 
2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்  மீது பொது விவாதத்தை தொடங்கி வைத்து தி.மு.க. உறுப்பினர் எ.வ.வேலு பேசினார். அவர் பேசியதாவது.,

திண்டிவனம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தசாலையை அமைப்பதற்கு ஒப்பந்தம் எடுத்திருந்தவர்கள், கம்பி ஜல்லி போன்றவை வாங்கி வைத்திருந்த நிலையில் சாலை அமைப்பு பணிநிறுத்தப்பட்டு விட்டது. அந்தபணியை தொடர்ந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நெடுஞ்சாலை தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் வழியாக போகிறது. எனவே அந்த சாலைகளை உடனடியாக முடிப்பதற்கு உரியநடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கிட்டு பேசினார். திண்டிவனம் கிருஷ்ணகிரி சாலைபணி 3 கட்டமாக நடத்தப்படுகிறது. அந்த சாலைப்பணிகளை மத்தியஅரசு நிறுவனம் செய்து வருகிறது. அது நின்று போனதற்கு மாநில அரசு காரணம் அல்ல என்று அமைச்சர் கூறினார்.

எ.வ.வேலு தொடர்ந்து பேசுகையில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஒய்வூதியம் வாங்குகிறவர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி வழங்குவதற்கு உயர்மட்ட அலுவலர்குழு அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளீர்கள். அது எந்த நிலையில் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார். அப்போது அமைச்சர், 7-வது ஊதிய குழு அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அதற்குரிய கால அவகாசம் நிர்ணயிக்கப்படும். அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று கேட்டார்.

எ.வ.வேலு தொடர்ந்து பேசுகையில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அதை உயர்த்தி கொடுக்க வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று கூறினீர்கள் அது எப்போது அமைக்கப்படும்? என்று கேட்டார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வையும், ஓய்வூதியம் பெறுகிறவர்களுக்கு அதற்கான உயர்வையும் மத்திய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு வழங்குவதற்காக ஒரு குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்துள்ளார். அந்த குழுவுக்கு 3 மாதம் அல்லது 4 மாதம் கால அவகாசம் தரப்படும். அந்த கால அவகாசத்தில் அவர்கள் ஆலோசனை செய்து உயர்வு குறித்த தகவல் பரிந்துரைகளை அளிப்பார்கள். அதை தொடர்ந்து உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்