முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் அப்துல்கலாமின் வெண்கல சிலை இன்று திறப்பு : மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016
Image Unavailable

ராமேசுவரம்  - ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் நிறுவுவதற்காக 7 அடி உயரம் கொண்ட அவரது உருவ வெண்கலச் சிலை நேற்று முன்தினம் வந்தது. இச்சிலை திறப்பு விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.  மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் இன்று (27-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாளில் ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது உருவ வெண்கலச்சிலை திறப்பு, மணிமண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, ஜமாத்துல் உலாமா கவுன்சில் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள், ‘விக்கிரக ஆராதனைக்கு இஸ்லாம் அனுமதி அளிக்காது. எனவே சிலை அமைப்பதை தவிர்ப்பது நல்லது’ என ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.  இதுபோன்ற எதிர்ப்புகளுக்கு இடையே 7 அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கலாம் வெண்கலச் சிலை நேற்று முன்தினம் காலை ராமேசுவரம் (பேக்கரும்பு) வந்து சேர்ந்தது.

இதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.  சிலை திறப்பு, மணிமண்டபம் அடிக்கல்நாட்டு விழா இன்று காலை 9 மணியளவில் நடைபெறுகின்றன. இதில் மத்திய அமைச் சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.  ஏற்கெனவே மத்திய அரசு சார்பில் டெல்லியிலும், இந்திய வெளியுறவுத் துறை சார்பாக யாழ்ப்பாணப் பொது நூலகத்தி லும், ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளின் சார்பாகவும் கலாமின் உருவச் சிலைகள் திறக் கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்