முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் மனித உரிமைப்போராளி ஐரோம் ஷர்மிளா 16 ஆண்டு உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடுகிறார்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்ட மனித உரிமைப்போராளி ஐரோம் ஷர்மிளா தனது பல ஆண்டு உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடுகிறார்.

 மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படுகிறது. பல நூறு மணிப்பூர் அப்பாவி இளைஞர்கள் ஆயுதப்படையினரால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு படையினர் எந்த வித குற்றச்சாட்டும் இல்லாத நபர்களை கைது செய்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்வதை கண்டித்தும், ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த 16ஆண்டுகளாக ஐரோம்  ஷர்மிளா உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

அவர் வருகிற ஆகஸ்ட் மாதம் தனது பல வருட உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். மணிப்பூர் தேர்தலில் அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடப்போவதையும், தேர்தலில் போட்டியிடப்போகும் தகவலையும் அவர் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்