முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் 4 அயல் நாட்டு தீவிரவாதிகள் நேற்றுசுட்டுக்கொல்லப்பட்டார்கள். மேலும் பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவிய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

 ஜம்மு காஷ்மீர்  மாநிலம் பாகிஸ்தான் எல்லைக்கு  அருகே இருப்பதால், அந்த நாட்டில் இருந்து தீவிரவாதிகள் எல்லை  வழியாக ஊடுருவி ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் அந்த மாநிலத்தில் வன்முறை தாக்குதல்களில் ஈடுபடுவதுடன் பாதுகாப்பு படையினரையும் கொன்று வருகிறார்கள். இதனால் , அந்த மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு இரவும் பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இருப்பினும் தீவிரவாதிகள் அடர்ந்த காட்டுப்பகுதியை பயன்படுத்தி அங்கிருந்து ரோந்து பணியில் ஈடுபடும் வீரர்கள் மீது குண்டுகளை வீசி உயிரிழப்பு ஏற்படுத்துகிறார்கள். இந்த நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில்  எல்லைப்பகுதியில் 4 அயல் நாட்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றார்கள். மேலும்   எல்லை வழியாக ஊடுருவிய ஒரு  தீவிரவாதியை கைது செய்தார்கள்.

இது குறித்து, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், தீவிரவாதியை உயிருடன் பிடித்தது மிகப்பெரும் சாதனையாகும் .இதன் மூலம் பாகிஸ்தானின்  உண்மை நிலை தெரிய வரும் என்றார்.

 இது குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், நவ்கம் செக்டரில், தீவிரவாதிகளுக்கான நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது. பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்ற 4 தீவிரவாதிகளும் அயல் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் ஒருவரை உயிருடன் பிடித்துள்ளோம். அந்த தீவிரவாதியிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்