முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுதப்படை அதிகாரச்சட்டத்தை விலக்கிக்கொள்ள உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும்: பாரிக்கர்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை விலக்கிக்கொள்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தான்முடிவு செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் உள்ளது. இந்த சட்டப்படி சந்தேகப்படும் நபர்களை கைது செய்து பாதுகாப்பு வீரர்கள் விசாரணை செய்ய முடியும். ,இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மாநில முதல்வர் மெகபூபா முப்தி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று கூறுகையில்,
  எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியை ராணுவ வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். தீவிரவாத தாக்குதல் உள்ள அந்த மாநிலத்தில்  உள்துறை அமைச்சக முடிவின் படியே ராணுவ வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை விலக்கி கொள்வது குறித்து உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும். உள்துறை அமைச்சகத்தின் முடிவின் படிதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

எல்லைப்பகுதியில் நமது ராணுவ வீரர்கள் தீவிரப்பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் எல்லை வழியாக ஊடுருவல் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது. எங்களது கடமையை நாங்கள் உரிய முறையில் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி நேற்று கூறுகையில், எங்களது மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்.  மாநிலத்தில் அமைதியான சூழல் திரும்பி வரும் நிலையில் இந்த சிறப்பு அதிகாச்சட்டத்தை விலக்கிக்கொள்வதை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்