முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா- வங்கதேச உள்துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை டெல்லியில் நாளை நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  இந்தியா -வங்கதேச உள்துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை டெல்லியில் நாளை நடக்கிறது.

 இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்க தேச உள்துறை அமைச்சர்  அசாதுசாமன் கான் கமால் இடையே நாளை டெல்லியில் பேச்சு வார்த்தை நடக்கிறது. இந்த பேச்சு வார்த்தையில் மத்திய கிழக்கு தீவிரவாத குழு நடவடிக்கைகளை ஒடுக்குதல், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு மேற்கொள்ளுதல், மற்றும் எல்லை வழியாக  பரவும் குற்றங்களை தடுத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

வங்க தேச தலைநகர் டாக்காவில் இந்த மாத துவக்கத்தில்,  தீவிரவாதிகள் ரெஸ்டாரண்ட்டில் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உள்பட 22 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த தீவிரவாத தாக்குதல் நடந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் தற்போது வங்கதேச தலைவர்  டெல்லிக்கு வருகிறார்.

வங்க தேச உள்துறை அமைச்சருடன் வரும் வங்கதேச தீவிரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் டெல்லியில் தேசிய விசாரணை முகமையின் அதிகாரிகளை சந்திக்கிறார்கள். இதே நேரத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் வங்க தேச எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் சந்திக்கிறார்கள்.  இந்தியாவில் பதுங்கி இருப்பதாக கருதப்படும் தீவிரவாதிகளின் பட்டியலை  டெல்லி வரும் வங்க தேச குழுவினர் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தையின் போது  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சக செயலர் ராஜீவ் மெகிரிஷி மற்றும் எல்லை பாதுகாப்பு படை தலைவர் மற்றும் போதை மருந்து கட்டுப்பாடு பிரிவின் தலைவர்  ஆகியோர் பங்கேற்கிறார்கள்.  இந்த இரு நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் பேச்சு வார்த்தை இதற்கு முன்னர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியிலும் இதனையடுத்து 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் வங்க தேசத்திலும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்