முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: வடகொரியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

வியேண்டியன்  - கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வடகொரியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா, உலக நாடுகளின் ஏகோபித்த எதிர்ப்பையும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டு சோதனையும் நடத்தி உலக அரங்கை அந்த நாடு அதிர வைத்தது.
வடகொரியாவின் அத்துமீறிய செயல்களால் கடும் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்த நாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. ஆனாலும் வடகொரியா, தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் தாவி சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 

அடுத்தடுத்த அணு ஆயுதம், மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்திய  வடகொரியா,  அமெரிக்காவை தாக்கும் வல்லமையை பெற்றுள்ளதாகவும் அண்மையில் அறிவித்தது.  இதற்கிடையே, 10 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டம் வியேண்டியம் நகரில் நடைபெற்றது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட   முக்கிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரீ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அத்துமீறி நடந்து கொண்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை வடகொரியா புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்