முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

டாக்கா  - வங்காளதேசத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த 1–ந்தேதி ஒரு ஓட்டலில் 5 பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்ட ஜமாத்–உல்–முஜாகிதீன் என்ற உள்நாட்டு அமைப்பை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இதற்கிடையே ரம்ஜான் சிறப்பு தொழுகையின் போதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் சம்பவத்தை அடுத்து வங்காளதேச போலீசார் பயங்கரவாதிகளை தேடும் பணியை தொடங்கினர். டாக்கா பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக கடந்த வியாழக்கிழமை தடை செய்யப்பட்ட இயக்க முக்கிய தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதனையடுத்து சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் போலீசார் சோதனை நடத்திய போது தாக்குதல் தொடர்பாக 18 வயது முதல் 30 வயது வரையிலான 4 பெண்களை கைது செய்தனர். அவர்கள் இருந்த வீட்டில் நடத்திய சோதனையில் அங்கு ஏராளமான கையெறி குண்டு மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.

டாக்காவை அடுத்த கல்யாண்பூரில் அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் சூழ்ந்தனர். அப்போது பயங்கரவாதிகள் போலீசார் மீது கையெறி குண்டை வீசினர். இதனையடுத்து போலீசார் அடிக்குமாடி குடியிருப்புக்குள் செல்ல முயன்றனர். அப்போது இருதரப்பு இடையேயும் துப்பாக்கி சண்டை தொடங்கியது. நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இப்போது அப்பகுதி போலீஸ் வசம் வந்தது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டாக்காவில் தொடர்ந்து அதிரடிசோதனை நடைபெற்று வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 9 பேரும் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்