முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ் தோல்வி முக்கிய காரணம்: 2-வது டெஸ்டில் தோல்வியடைந்தது குறித்து மிஸ்பா விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

லார்ட்ஸ்  - இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் 330 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதற்கு டாஸ் தோல்வியே முக்கிய காரணம் என்று மிஸ்பா கூறியுள்ளார். இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்றது. கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 254 ரன்களும், அலைஸ்டர் குக் 105 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி கிறிஸ் வோக்ஸின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 198 ரன்னில் சுருண்டது. மிஸ்பா அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி 391 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இங்கிலாந்து 564 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 565 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பெரிய வெற்றி இலக்கை நோக்கி பயணம் செய்த பாகிஸ்தான் அணி 234 ரன்னில் சுருண்டு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 330 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த மோசமான தோல்விக்கு டாஸ் தோற்றதே முதல் காரணம் என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார். தோல்வி குறித்து மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘இந்த டெஸ்டில் இங்கிலாந்து எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. முதலில் டாஸ் வென்றது முக்கியமானது.

அதன்பிறகு ஜோ ரூட் மற்றும் குக் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் அவர்கள் அருகிலேயே செல்ல முடியாமல் போனது. ஒவ்வொரு துறையிலும் நாங்கள் முன்னேற்றம் அடைவது தேவையானது. எதிரணி வீரர்களை 350 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். 600 ரன்களை எதிர் அணிகள் தொட்டு விட்டால் அதை எட்டிப்பிடிப்பது மிகவும் கடினம். இந்த வகையில் நாம் முதலில் பேட்டிங் செய்தால் 350 முதல் 400 ரன்கள் சேர்த்துவிட வேண்டும். இந்த போட்டியில் இருந்து நாங்கள் தூக்கியெறியப்பட்டோம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்