முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டம் தவிர மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

ஜம்மு  - ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தை தவிர்த்து மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறையும், கலவரமும் தொடர்ந்தது. காஷ்மீரில் கடந்த 17 நாட்களாக அடிக்கடி நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறிப்பாக, ஜம்மு பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஜம்மு பகுதிகளில் அமைதி திரும்ப தொடங்கியதும் முதலில் பந்திப்போரா, பாரமுல்லா, பட்காம் மற்றும் கந்தர்பல் மாவட்டங்களில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. எனினும், இந்த மாவட்டங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, செல்போன் மற்றும் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை திரும்ப பெறப்பட்டது.

மாநிலத்தில் அமைதி நிலவியைதை தொடர்ந்து ஆனந்த்நாக் நகரை தவிர்த்து இப்போது மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது,  போலீஸ் அதிகாரி பேசுகையில், “ஆனந்த்தாக் நகரை தவிர்த்து காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது,” என்று கூறினார். இருப்பினும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு 4 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையானது நீடிக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மக்கள் உயிரிழப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாதிகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இன்றில் இருந்து 29-ம் தேதி வரையில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இன்று குல்காம் நோக்கி பேரணி நடத்துவதற்கும் பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.  காஷ்மீரில் கடந்த 18 நாட்கள் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் சுமார் 50 பேர் பலியாகினர், 5500 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்