முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் கொலை : ஆப்கானிஸ்தான் படையினர் பதிலடி

புதன்கிழமை, 27 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

காபூல் -  ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நான்கர்ஹாரில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தீவிரவாத தலைவரை, கொன்றுள்ளதாக ஆப்கன் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னர் தாலிபான் படைத்தலைவராக செயல்பட்ட சாத் இம்ராட், கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட சந்தேகத்திற்குரிய 120க்கு மேலான ஐ.எஸ். தீவிரவாதிகளில் ஒருவர்.

கோட் மாவட்டத்தை மையப்படுத்தி நடைபெற்றுவரும் இந்த நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐ.எஸ். மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை கைப்பற்றியுள்ளதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். அமைப்பினருக்கு இந்த நடவடிக்கை ஒரு பெரிய பதிலடியாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்