முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: 31 பேர் பலி

புதன்கிழமை, 27 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

பெய்ரூட்  - சிரியாவில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 31 பேர் பலியானார்கள். சிரியாவில் துருக்கி எல்லை அருகே ஹசாகா மாகாணம் உள்ளது. இந்த மாகாணம், குர்து இனத்தவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள காமிஷ்லி நகரின் பாதுகாப்பு தலைமையத்தில் அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்புகள் நடந்தன. முதல் குண்டு வெடிப்பு கார் குண்டுவெடிப்பு ஆகும். 2-வது குண்டுவெடிப்பு, மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பு ஆகும்.

இவ்விரு குண்டுவெடிப்புகளாலும் அந்தப் பகுதி குலுங்கியது. இவற்றில் சிக்கி 31 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவ்விரு குண்டுவெடிப்புகளுக்கும் ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago