முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆந்திர சொகுசு பஸ்களில் ரூ300-க்கான தரிசன டிக்கெட்

புதன்கிழமை, 27 ஜூலை 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆந்திர சொகுசு பஸ்களில் ரூ.300-க்கான தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வருகிற 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 ஆந்திர மாநில  போக்குவரத்துக்கழக திருப்பதி மண்டல மேலாளர் நாகசிவுடு நிருபர்களிடம் கூறியதாவது,

 ஆந்திர மாநில போக்குவரத்துக்கழகம் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து ஒரு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி  ஆந்திர போக்குவரத்து கழகத்திற்கு கீழ் இயங்கும் சூப்பர் லக்சரி கருடா, இந்திரா, கருடா பிளஸ், சொகுசு பேருந்துகளில் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ரூ 300க்கான சிறப்பு நுழைவுக்கட்டண டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொலை தூரத்தில்இருந்து வரும் பயணிகள் ஓய்வெடுத்து பின்னர் பயணத்தை தொடரும் வகையில் 5மணி இடைவெளி விடப்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் இறங்கி திருமலை பாலாஜி பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பஸ்சில் 5 மணி நேரம் இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்யலாம். முதல் 3மணி நேரம் ஓய்வெடுத்து விட்டு கடைசி இரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் வைகுண்டம் செல்லும் நுழைவு வரிசை வரை பஸ் மூலம்  பக்தர்கள் செல்லலாம்.  இந்த திட்டம் வரும் 1ம் தேதி முதல் அமல் படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago