முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 27 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - இந்தியாவில் நகரமயமாக்கலின் விகிதம் வியக்கதக்க அளவில் இருப்பதாகவும் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் 60 சதவீத இந்தியர்கள் நகரவாசிகளாக மாறிவிடுவார்கள் என்று நகர்புற வளர்ச்சி மத்திய இணை அமைச்சரான ராவ் இந்தேர்ஜித் சிங் தெரிவித்தார். பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய மந்திரி ராவ் இந்தேர்ஜித் சிங் கூறியதாவது:- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நகர்புறங்களில் 31 சதவீத மக்கள் வசித்து வருகின்றனர். வரும் ஆண்டுகளில் மக்கள் அதிக அளவில் நகர்புறங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருவார்கள். இதனால், 2050 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 60 சதவீத மக்கள், நகர்புறங்களில் வசிப்பார்கள்.

இந்தியாவின் நகரமயமாக்கல் விகிதம் பிரம்மிக்கத்தக்க அளவில் இருக்கிறது. AMRUT திட்டத்தின் கீழ் பெரும் நகரங்களை முதலில்  வலுப்படுத்துதல் பிறகு இரண்டாவது கட்டமாக சிறிய நகரங்களை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடிநீர் விநியோகம், கழிவு நீர் மேலாண்மை, வெள்ள நீர் வடிகால், நகர்புற போக்குவரத்து மற்றும் வளர்ச்சி,பசுமை விண்வெளிகள், சிறப்பு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் ஆகியவை அடங்கிய  அடிப்படை நகர்புற கட்டமைப்பு மேம்படுத்துவதை மேற்கண்ட AMRUT திட்டம் வழங்குகிறது.  இந்த திட்டத்திற்கு உலக வங்கி மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் மூலம் பெறப்படும் நிதி பயன்படுத்தப்படவில்லை. மத்திய அரசு மூலமாகவே இந்த திட்ட இலக்கிற்கு நிதி வழங்கப்படுகிறது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்