முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகேஷ் அம்பானியின் மனைவிக்கு ஒய்' பிரிவு பாதுகாப்பு: கெஜ்ரிவால் கண்டனம்

புதன்கிழமை, 27 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானிக்கு மத்திய அரசு ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி இருப்பதற்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிக முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக்க தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் போன்றவர்களுக்கு ’இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த வரிசையில் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த சில ஆண்டுகளாக ‛இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது மனைவி நிடா அம்பானிக்கு மத்திய அரசு ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.

அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்ததன் அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. நிடா அம்பானிக்கு ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், டெல்லியில் தினமும் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் வைக்கப்படும் போதும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை.ஆனால் பிரதமர் தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்