முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு

புதன்கிழமை, 27 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுவிப்பு வழக்கில் மத்திய அரசை ஆலோசித்தால் மட்டுமே போதுமானது. மேலும் ஆலோசனை என்ற சொல் மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்பதாக அர்த்தமாகாது என்றும் தமிழக அரசு தன் சீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015 டிசம்பர் 3, அன்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் மத்திய புலனாய்வுக் கழக விசாரணையில் குற்றவாளிகள் என கோர்ட்டினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு என்பது மாநில அரசால் ஏகமனதாக தீர்மானிக்க முடியாது என்று கூறியிருந்தது. இந்தத் தீர்ப்பினால் கடந்த 2014 பிப்ரவரி 19-ல் தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை முன்மொழிவு செய்து எழுதிய கடிதம் பயனற்று போனது.

ராஜீவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், இந்தக் கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அளிப்பதற்குப் பதிலாக அடுத்தநாளே, அதாவது பிப்ரவரி 20-ம் தேதியே விடுதலையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்தது. அரசியல் சாசன அமர்வு கடிதத்தின் தகுதிகளை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, மாறாக 3 நீதிபதிகள் அடங்கிய தனி அமர்வுக்கு இதை அனுப்பியது.

இதன் மீதான தீர்ப்பில் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி கலிபுல்லா ஆகியோர் கூறும்போது, பிரிவு 435-ன் படி ஆலோசனை என்ற சொல் ஒப்புதல் என்பதாகவே அர்த்தம் கொடுக்கிறது என்று கூறி தேசிய நலன் சார்ந்த விவகாரமாக இருப்பதால் வெறும் ஆலோசனை என்பது ஒரு வெறும் நடைமுறையாக மட்டும் ஏற்க முடியாது, அதற்கும் மேலானதாகவே பொருள் கொள்ள முடியும் என்று கூறினர்.

மேலும் ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுதும் சிறையில் இருப்பதுதான். குறிப்பாக பயங்கரவாதக் குற்றங்களில் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டால் தண்டனை 20, 30, 40 ஆண்டுகள் என்று சென்று கொண்டேயிருக்க வேண்டியதுதான், மன்னிப்பு கோர உரிமையல்ல என்பதே பொருள் என்பதை வலியுறுத்தினர்.

நீதிபதி கலிஃபுல்லா தனது தீர்ப்பில், “ஒரு நபர் மற்றொருவரின் சுதந்திரத்தை நிரந்தரமாக அழித்து விட்ட நிலையில் அவருடைய குடும்பத்தின் சுதந்திரத்தையும் அச்சுறுத்தியுள்ள நிலையில் தன்னுடைய சுதந்திரத்துக்காக கோர்ட்டை நாடுவது சரியல்ல. சுதந்திரம் என்பது ஒருதலைபட்சமான கருத்தல்ல” என்றார்.  மேலும், திருந்தும் வாய்ப்பு என்பது தண்டனை குறித்த அச்சமில்லாமல், சாத்தியமில்லை என்றும் அவர் கடுமையாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆலோசனை என்பது ஒப்புதலுக்கான தேவையை வலியுறுத்தாது என்று கூறி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய்கோரி தமிழக அரசு சீராய்வு மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago