முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்க மருந்து விவகாரம்: ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் நர்சிங்யாதவுக்கு பதிலாக பிரவீன் ரானா

புதன்கிழமை, 27 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய நர்சிங் யாதவுக்கு பதிலாக பிரவீன் ரானா ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளதாக உலக மல்யுத்த சம்மேளன இணைய தளத்தில் தகவல் இடம் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் நடக்கிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மல்யுத்தப்போட்டியில் இந்தியா சார்பில் 5 வீரர்கள், 3 வீராங்கனைகள் ஆக மொத்தம் 8 பேர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்த மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்தில் சிக்கினார். இரண்டு கட்ட பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்கம் அவரை சஸ்பெண்டு செய்து இருந்தது. இதனால் அவரால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நர்சிங் யாதவுக்கு பதிலாக பிரவீன் ரானா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. 74 கிலோ உடல் எடை பிரிவில் அவர் கலந்து கொள்கிறார். இந்த ஒலிம்பிக் சங்கம் இதை உலக மல்யுத்த சம்மேளனத்திடம் தெரிவித்தது. நர்சிங் யாதவுக்கு பதிலாக பிரவீன் ரானா இடம் பெற்றுள்ள தகவல் உலக மல்யுத்த சம்மேளன இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் நர்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு கலைந்தது. 23 வயதான ரானாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க அதிஷ்டம் கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்