முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்: நாராயணசாமி பேட்டி

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் வெகுவிரைவில் நியமிக்கப்படுவார், இதற்காக காங்கிரஸ் மேலிடம் தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளதாக புதுவை முதல் மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்
புதுவை முதல் மந்திரி நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதற்காக மறு சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு நாள் கழித்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டிய காரணம் என்ன?ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டு மிக தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கொலை வழக்கில் கொலையாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது. இப்போது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதில் சட்டம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டெல்லியில் நடந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கான மாநாட்டில் கலந்து கொண்டு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளோம்.புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் விமான சேவை செயல்பட்டு வந்தது. மீண்டும் புதுச்சேரியில் விமான சேவை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டு விமான சேவையை தொடங்குவதற்கான விதிமுறைகளை அடுத்த சில தினங்களில் இறுதி செய்ய உள்ளது.அடுத்த 2 மாதத்திற்குள் புதுவையில் இருந்து பெங்களூருக்கு விமான சேவை தொடங்குவதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் நாங்கள் புதுவையில் இருந்து பெங்களூர் மட்டுமின்றி சென்னை, கோவை, திருச்சி, திருப்பதி, ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கும் விமான சேவை தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம். அது பற்றி பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் வெகுவிரைவில் நியமிக்கப்படுவார் இதற்காக காங்கிரஸ் மேலிடம்தீவிர பரிசீலனையில்ஈடுபட்டுள்ளது.சரக்கு மற்றும் சேவைவரி, மாநிலங்களுக்கான புதிய சேவை வரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் புதுவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்