முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள சென்ற கொலம்பிய அழகி சிறையில் வாடும் அவலம்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

பிஜீங்  - உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள சீனா சென்ற அழகிக்கு போதை மருந்து கடத்தலில் 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது, மேலும் சிறைவாசம் முடிந்ததும் நாடு கடத்தவும் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஜூலியானா லோபஸ் சர்ரசொலா( வயது 22)  கொலம்பியாவில் நடைபெற்ற மிஸ் ஆண்டிகுவாக தேர்வானவர்.

சீனாவில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஜூலை 18 ந்தேதி சீனாவின் கங்க்ஜோ பையுன் சர்வதேச விமான நிலையத்தில் உலக அழகி பட்டத்தை வெல்லப்போகும் நம்பிக்கையுடன் வந்து இறங்கி உள்ளார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்து உள்ளனர்.சோதனையில் அவர் தனது லேப்-டாப்பில் 610 கிராம் கொகைன் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கபட்டது. 

இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு குவாங்டோங் மாநிலத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிமன்றத்தில் சர்ரசொலா போதை பொருள் கடத்தியதை ஒப்பு கொண்டார்.மேலும் தன்னை செர்ஜியோ என்பவர் போதை பொருளை கடத்தும் படி கூறியதாக கூறினார். சர்ரசொலா கடத்திய  போதை பொருளின் அளவை வைத்து  மரண தண்டனை அல்லது  ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்