முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, பாரத ஸ்டேட் வங்கியுடன் பிற வங்கிகளை இணைக்கும் மத்திய அரசு முடிவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் இன்று (29-ந்தேதி) ஒரு நாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், மைசூர், பாட்டியாலா ஐதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.இதனை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12, 13-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.இதையடுத்து டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவால் இந்த வேலை நிறுத்தம் செப்டம்பர் 26-ந்தேதிவரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இதில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஈடுபடுகிறார்கள். 80 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள 8500 வங்கிகளில் பணிபுரியும் 70 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் நாளை வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்க கூடும். காசோலை பரிவர்த்தனை, பணப்பட்டுவாடா, உள்ளிட்ட பல்வேறு பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் கோடிக்கு வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஏ.டி.எம். மையங்களில் இன்று பணம் நிரப்பப்படுகிறது. அனைத்து வங்கிகளும் அதன் ஏ.டி.எம். மையங்களில் முழுமையான அளவு பணத்தை நிரப்பும் பணியில் பிற்பகல் முதல் ஈடுபடுகின்றன.வேலை நிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் கூறியதாவது:-

நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் நடக்கிறது. ஊழியர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள். இதனால் வங்கி சேவை பாதிக்கும். பல ஆயிரம் கோடி காசோலைகள் தேக்கமடையும்.கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை 5.30 மணிக்கு அண்ணா சாலை ஓரியன்டல் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்