முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்க் மாநட்டில் கலந்து கொள்ள மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பாகிஸ்தான் பயணம்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சார்க் மாநட்டில் கலந்து கொள்ள மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பாகிஸ்தானுக்கு செல்லவிருக்கிறார். தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3, 4 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடக்கிறது.இதில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் சார்க் நாடுகளிடையே பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு குறித்து பேசப்படுகிறது.

சமீபத்தில் காஷ்மீரில் நடந்த கலவரம் தொடர்பாக பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் காஷ்மீர் கலவரத்தை பாகிஸ்தான் தூண்டுவதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் குற்றம்சாட்டி இருந்தார். இரு நாடுகளிடையே கருத்து மோதல்களால் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையில் ராஜ்நாத்சிங் பாகிஸ்தான் செல்வது குறிப்பிடத்தக்கது. தனது பயணத்தின் போது பாகிஸ் தான் தலைவர்களை சந்திப்பாரா? என்பது அறிவிக்கப் படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்