முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தில் கைதான 5 வழக்கறிஞர்களுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சென்னையில் நடந்த முற்றுகைப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களுக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை ஐகோர்ட்டு கொண்டு வந்த வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வழக்கறிஞர்கள், அந்த சட்ட திருத்தத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி திங்கட்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர். ஐகோர்ட் பகுதியில் நடந்த இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்தின்போது அத்துமீறி நடந்துகொண்டதாக 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 5 பேர் சார்பிலும் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், 5 வழக்கறிஞர்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 5 வழக்கறிஞர்களும் விழுப்புரத்தில் 2 வாரம் தங்கியிருந்து நகர காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு வேளை கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கறிஞர்கள் தீவிர போராட்டம் காரணமாக சட்டத்திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்