முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லையில் ஊடுருவலா? ஆராய்வதாக சீனா மழுப்பல் பதில்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், இந்திய எல்லையில் சீன வீரர்கள் மற்றும் விமானம் ஊடுருவியது குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், எங்கள் வீரர்கள் ஊடுருவினார்களா ? என்பது குறித்து நாங்கள் ஆராய்கிறோம் என சீனா மழுப்பலாக பதிலளித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சீன எல்லைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மாநிலம் தங்களுக்கு அருகாமையில் பயன்படுத்தி சீனாவின் ராணுவ விமானம் மற்றும் வீரர்கள் சாமோலி மாவட்டத்தில் ஊடுருவினார்கள்.

இதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில்  சீன பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கர்னல்  யாங் யுஜூன் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் எங்களது வீரர்கள் ஊடுருவியதாக வந்த தகல்வளின் உள்ள உண்மை நிலையை நாங்கள் ஆய்வு செய்கிறோம் .
இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை சீன மக்கள் ராணுவ  எல்லை துருப்புகள் மீறுவது கிடையாது என தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் சீன துருப்புகள் வான் வழியாகவும், நில வழியாகவும் ஊடுருவியுள்ளன. அந்த துருப்புகள் இந்திய ராணுவம் இல்லாத இடத்தில் முகாமிட்டு இருந்தன. சீன ஹெலி காப்டர் கள் உத்தரகாண்ட் மாநில வான் பகுதியில்  5 நிமிடத்திற்கு மேலாக வட்டமிட்டு பறந்தன. அந்த சம்பவம் கடந்த 19-ம் தேதியன்று நடைபெற்றது. சீன ஊடுவல் குறித்து  உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் கூறுகையில், நடந்த நிகழ்வுகள் கவலை யளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago