முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்டு 15-ல் சுதந்திர தினம்: டெல்லியில் 6 நாட்கள் கலை நிகழ்ச்சி : மத்திய அரசு ஏற்பாடு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் 6 நாட்களுக்கு கோலாகல கலை நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் 70-வது சுதந்திர தினம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை ‘‘பாரத விழா’’ என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி ஆகஸ்டு 12-ந்தேதி முதல் 6 நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு இந்தியா கேட் பகுதியில் தொடக்க விழா நடைபெறும்.

இதற்காக இந்தியா கேட் பகுதி வண்ண விளக்குகளால் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறகு 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பாரத விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபாதையில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மக்களின் பழக்க-வழக்கங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த அரங்குகள் இருக்கும்.

இதன் மூலம் நாட்டு மக்களிடையே தேச பக்தியை ஊக்குவிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரத விழா கலை நிகழ்ச்சிகளில் எல்லா மாநில இசை கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். ராணுவ வீரர்களின் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்