முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடுமலை சங்கர் கொலை வழக்கு: அரசு சாட்சிகள் 15 பேரிடம் திருப்பூர் கோர்ட்டில் விசாரணை

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

திருப்பூர்  - உடுமலை சங்கர் கொலை தொடர்பாக அரசு சாட்சிகள் 15 பேரிடம் சாட்சி விசாரணை நடந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் மாணவர் சங்கர். இவர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்துக்கு கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 13-ந் தேதி சங்கர் வெட்டி கொலை செய்யப்பட்டார். கவுசல்யா பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி (வயது 49), தாய் அன்னலட்சுமி (42), மாமா பாண்டித்துரை(39), மற்றும் மணிகண்டன் (25), மைக்கேல் (25), செல்வக்குமார்(26), ஜெகதீசன் (31), தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்னா (20), மணி கண்டன் (39) ஆகிய 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் நடந்து வருகிறது. சங்கர் கொலை வழக்கு தொடர்பாக சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.

நேற்று (வியாழக்கிழமை) திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் விசாரணை நடந்தது. இதனால் கோவை சிறையில் இருந்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி உள்பட 11 பேர் திருப்பூர் கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். பின்னர் அவர்கள் 11 பேரும் நீதிபதி அலமேலு நடராஜன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். நேற்று உடுமலை சங்கர் கொலை தொடர்பாக அரசு சாட்சிகள் 15 பேரிடம் சாட்சி விசாரணை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்