முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 31,834 தொண்டர்கள், பிரமுகர்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் திமுக, காங்கிரஸ், , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 31,834 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் சென்னை, ராயப்பேட்டையில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, த.மா.கா, தேமுதிக, ம.தி.முக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும், அமைப்புகளிலும் பணியாற்றி வரும் வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், திருவள்ளூர் மேற்கு, விழுப்புரம் தெற்கு, கிருஷ்ணகிரி, திருப்பூர்மாநகர், திருப்பூர் புறநகர், கோவை புறநகர், அரியலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், பேரூராட்சி மன்றத் தலைவர் - பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் என, 3,500 மகளிர் உள்ளிட்ட 31,834 பேர் தங்களைக் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில், தே.மு.தி.க-வைச் சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினர் சு.மணிமாறன், திருக்கோவிலூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் எடையூர் பழனி, மாவட்ட துணைச் செயலாளரும், 2014, விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளருமான உமாசங்கர், மாவட்ட துணைச் செயலாளர் கலையரசன், முகையூர் ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி ஞானவேல், உளுந்தூர்பேட்டை ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி பஷீர் அகமத்கான், உளுந்தூர்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், திருக்கோவிலூர் வட்டார த.மா.கா. தலைவர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி செயலாளர் மணிகண்டன் உட்பட, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட 6,000 பேர்களும்,
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஏற்பாட்டின் பேரில், பா.ஜ.க-வைச் சேர்ந்த கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் கணேஷ், கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றச் செயலாளர் உலகநாதன் தலைமையில் 1,700 பேர்களும், வால்பாறை ஒன்றிய அழகிரி பாசறைச் செயலாளரும், சிறுவணிக மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவருமான ஸ்டேன்லரி பிர்நன்சா தலைமையில் 1,600 பேர்களும், தி.மு.க-வைச் சேர்ந்த கோவை மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் கதிரேசன் தலைமையில் 500 பேர்களும், தே.மு.தி.க-வைச் சேர்ந்த கோவை மாவட்ட துணைச் செயலாளரும், இந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவருமான சுப்ரமணியம் தலைமையில் 500 பேர்களும், குள்ளக்காபாளையம் ஊராட்சிச் செயலாளர் குமரவேல் தலைமையில் 200 பேர்களும், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பயனியர் தியாகு தலைமையில் 300 பேர்களும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியச் செயலாளர் தஞ்சை முருகேசன் தலைமையில் 200 பேர்களும், ஆக மொத்தம், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட 5,000 பேர்களும்,
கரூர் மாவட்ட அ.தி.மு.க.  செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில், தே.மு.தி.க-வைச் சேர்ந்த கரூர் மாவட்ட அவைத் தலைவர் பஞ்சப்பட்டி பாலன், மாவட்டத்  துணைச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் குமாரசாமி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் பாக்கியம் கணபதி, கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அறிவழகன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் விஜயசேகர், தாந்தோணி ஒன்றியச் செயலாளர் தினேஷ்குமார், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் நாகமுத்து, கரூர் நகரச் செயலாளர் பஷீர் அகமது, மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளரும், 40-வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான மோகன்ராஜ், நகர மன்ற உறுப்பினர்களான 37-வது வார்டு நாகராஜன், 41-வது வார்டு மஞ்சுளா, 45-வது வார்டு மாரியம்மாள், ம.தி.மு.க-வைச் சேர்ந்த தாந்தோணி நகரச் செயலாளரும், கரூர் நகர மன்ற 47-வது வார்டு உறுப்பினருமான சத்தியமூர்த்தி, தி.மு.க-வைச் சேர்ந்த கரூர் தெற்கு நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் குணசேகரன், அரவக்குறிச்சி ஒன்றியம், கொடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பத்மநாதன், காங்கிரசைச்  சேர்ந்த கரூர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் செல்வராஜ், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அக்னி, அகரமுத்து, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தைச் சேர்ந்த கரூர் மாவட்டச் செயலாளர் கலைராஜன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கரூர் மாவட்டச் செயலாளர் முருகேசன் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட 5,000 பேர்களும் அருந்ததி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், தமிழ் நாடு காலணி, தோல் பொருள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர்.வலசை ரவிச்சந்திரன் தனது கட்சியைக் கலைத்துவிட்டு, மாநில நிர்வாகிகளான துணைத் தலைவர் எம்.பி. கோவிந்தசாமி, பொருளாளர் சோமு உள்ளிட்ட 5,000 பேர்களுடனும்,  தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.  செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான  தாமரை ராஜேந்திரன் ஏற்பாட்டின் பேரில், தி.மு.க-வைச் சேர்ந்த அரியலூர் மாவட்ட துணைச் செயலாளர் சாந்தி தலைமையில், தே.மு.தி.க அரியலூர் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், அரியலூர் நகரச் செயலாளர் சிவா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் சத்தியமூர்த்தி உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உளளிட்ட 3,000 பேர்களும்,
திருப்பூர் புறநகர் மாவட்டக் அ.தி.மு.க. செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில், தி.மு.க-வைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை நகர மன்ற 15-வது வார்டு உறுப்பினர்  சாய்ரா பானு, 15-வது வார்டுச் செயலாளர் பாபு, தே.மு.தி.க-வைச் சேர்ந்த திருப்பூர் புறநகர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளரும், காரத்தொழுவு ஊராட்சிமன்றத் தலைவருமான சுரேஷ் (எ) பொன்.முத்துலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினரும், உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மகேஷ்குமார், மூலனூர் ஒன்றியச் செயலாளர் சக்திவேல், ம.தி.மு.க-வை சேர்ந்த உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் காளிமுத்து, ஒன்றியத் தலைவர் ராமலிங்கம், உடுமலைப்பேட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஜனகராஜ் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட 1,100 பேர்களும்,
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சரான பாஸ்கரன் ஏற்பாட்டின் பேரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை ஒன்றியம், தமராக்கி தெற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அய்யனார், இலுப்பக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி மாரியப்பன், தி.மு.க-வைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளரும், சிவகங்கையை  சேர்ந்த நகர மன்ற 25-வது வார்டு உறுப்பினருமான ராஜபாண்டியன், நகர துணைச் செயலாளரும், நகர மன்ற 21-வது வார்டு உறுப்பினருமான பாக்கியலட்சுமி உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட 1,000 பேர்களும்,
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஏற்பாட்டின் பேரில், த.மா.கா-வைச் சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினரும், பீர்க்கன்காரணை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவருமான வளையாபதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவர் எலிசபெத், மாவட்டப் பொதுச் செயலாளர் காண்டீபன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் அங்கம்மாள், பீர்க்கன்காரணை பேரூராட்சி மகளிர் அணித் தலைவரும், பேரூராட்சி மன்ற 14-வது வார்டு உறுப்பினருமான ராஜாமணி, மாவட்டப் பிரதிநிதியும், 5-வது வார்டு உறுப்பினருமான புருஷோத்தமன், தே.மு.தி.க-வைச் சேர்ந்த மாடம்பாக்கம் பேரூராட்சிச் செயலாளரும், பேரூராட்சி மன்ற 10-வது வார்டு உறுப்பினருமான எத்திராஜ், பெருங்களத்தூர் பேரூராட்சிச் செயலாளர் ஆதிகேசவன், ம.தி.மு.க-வைச் சேர்ந்த பீர்க்கன்காரணை பேரூராட்சித் தலைவரும், பேரூராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட 1,000 பேர்களும்,
திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன் ஏற்பாட்டின் பேரில், தி.மு.க-வைச் சேர்ந்த ஆவடி நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன் (எ) தென்றல் மகி, 26-வது வார்டு இளைஞர் அணிச் செயலாளர் வீரராகவன், பா.ஜ.க-வைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஆர்.ராஜாமணி உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட 1,000 பேர்களும், பேர்களும், தங்களைக் கழகத்தின் அடிப்படைஉறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தே.மு.தி.க-வைச் சேர்ந்த வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதிச்செயலாளர். முகமதுஜான் தலைமையில், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர். ஸ்ரீதர், பகுதி துணைச் செயலாளர் நாகப்பன், ஆர்.கே. நகர் பகுதி இளைஞர் அணிச் செயலாளர் ஆனந்தன், பகுதி மகளிர் அணிச் செயலாளர் தமிழ்செல்வி, கொளத்தூர் பகுதிச் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட 1,000 பேர்களும், தே.மு.தி.க-வைச் சேர்ந்த வட சென்னை மாவட்டப் பொருளாளரும், திரு.வி.க. நகர் தொகுதி பொறுப்பாளருமான வசந்தராமன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ரவீந்திரநாத், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் சச்சின் ராஜா உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 500 பேர்களும்,
த.மா.கா-வைச் சேர்ந்த மாநில செயற்குழு முன்னாள் உறுப்பினரும், தமிழ் நாடு டெக்ஸ்டைல்ஸ் & கார்மென்ட்ஸ் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத்தலைவருமான ராயபுரம் எஸ்.கே.சிவா தலைமையில், வட சென்னை மாவட்டப் பொதுச்செயலாளர் ஜெ.பாலபிரகாஷ், செயலாளர்  ஆர்.மணிமாறன், பொருளாளர் எஸ்.கார்த்திக் உள்ளிட்ட 500 பேர்களும்,
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் அழகு சேர்வை தலைமையில், மூவேந்தர் முன்னணிக் கழக சிவகங்கை மாவட்டத் தலைவர் வாணியங்குடி போஸ் சேர்வை, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரேம்குமார், தே.மு.தி.க-வைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர டேவிசன், மருதுபாண்டியர் அறக்கட்டளை சிவகங்கை மாவட்டத் தலைவர் நாகமுத்து சேர்வை உள்ளிட்ட 12 பேர்களும் ம.தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ரெட்சன்சி  அம்பிகாபதி தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ராஜீ,  ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் தங்கவேல் உள்ளிட்ட 10 பேர்களும், தங்களை அ.தி.மு.க.வின்  அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவை  ஜெ பேரவைச் செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டின் பேரில், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  அன்னபூர்ணா தங்கராஜ், அதே போல், ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கண்ணகி ஆகியோர்  தனித் தனியே நேரில் சந்தித்து, தங்களை அ.தி.மு.க.  அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா  முன்னிலையில், அ.தி.மு.க.  தகவல் தொழில் நுட்பப் பிரிவுத் தலைவர் பாலு ஏற்பாட்டின் பேரில், தமிழ் நாடு காங்கிரஸ் மாநில அமைப்பாளர்  மூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவு செயலாளர் மஞ்சுநாதன், மாவட்ட ஆலோசகர் சரவணன், தருமபுரி மாவட்ட பிரிவு ஆலோசகர் மகேந்திரன் உள்ளிட்ட 500 பேரும், நாடாளும் தெலுங்கு மக்கள் நாடாளும் தெலுங்கு மக்கள்கட்சியின் மாநில துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் கட்சியின் 100 பேர்களும், ஆக மொத்தம் 600 பேர்களும்,
மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில், தே.மு.தி.க-வைச் சேர்ந்த செல்லம்பட்டி ஒன்றிய துணைச்செயலாளர் வசந்தகுமார், மதுரை வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் சிங்காரவேலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கரன், பா.ஜ.க-வைச்சேர்ந்த செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் கோட்டைச்சாமி; மதுரை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க மதுரை மாவட்ட துணைத் தலைவரும், அய்யூர் ஊராட்சி மன்றத் தலைவருமான  அன்பு, தி.மு.க-வைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் தங்கபாண்டி, அலங்காநல்லூர் ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி  மலைச்சாமி, த.மா.கா-வைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்டப் பொதுச் செயலாளர் ராமன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் குமுதா ராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த உழவர் இயக்க மாநில இணைச் செயலாளர் ராக்கப்பன் அக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 400 பேர்களும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில், தமிழ் நாடு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மாவட்டச் செயலாளர் வீரணசிங்கம், தே.மு.தி.க-வைச் சேர்ந்த திருநெல்வேலி மாவட்டப்பொருளாளர் லயன் திவ்யா ரெங்கன், மதுரை மாநகர் மாவட்டம் 68-வது வட்டச் செயலாளர் ஏஜாஸ் உசேன் (எ) சையத் அப்துல் ரஹீம் உட்பட நிர்வாகிகள் உள்ளிட்ட210 பேர்களும்,
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஏற்பாட்டின் பேரில், த.மா.கா- திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் ஆர். சுந்தர்ராஜன், பொங்கலூர் வட்டாரத் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஜி.பி.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயா, ஆர்.முத்துச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ராமசாமி, தி.மு.க-வைச் சேர்ந்த கோவை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ்குமார், தே.மு.தி.க-வைச் சேர்ந்த அவினாசி ஒன்றியச் செயலாளர் எம்.வடிவேல், மாவட்டதுணைச் செயலாளரும், பழங்கரை ஊராட்சி மன்றத் தலைவருமான எம்.செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநில மாதர் குழு உறுப்பினர் எம்.ஈஸ்வரி, மதுரை புறநகர் மாவட்டக் குழு உறுப்பினரும், திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியச் செயலாளருமான எஸ்.வேல்முருகன், கொங்கு நாடு முன்னேற்றக் கழக மாநில அமைப்பாளர் எஸ்.ஏ.நந்தகுமார், மாவட்டத் தலைவர் என்.நடராஜன், பொருளாளர் கே.சி.சுந்தரம், அவிநாசி - அத்திக்கடவு கூட்டமைப்பின் அவினாசி ஒன்றியத்  தலைவர் வேலுசாமி மற்றும் அன்னூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்  உள்ளிட்ட 204 பேர்களும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தொகுதித் தலைவர் மகாலிங்கம் தலைமையில், அக்கட்சியின் கிளை உறுப்பினர்கள் ஸ்ரீதர், மீனாட்சி, துளசிராஜா, விஸ்வநாதன், குபேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் ஒன்றிய கரும்பாக்கம் ஊராட்சிச் செயலாளர் கே.விஜயகுமார் உள்ளிட்ட 97 பேர்களும்,
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாசம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் ஏற்பாட்டின் பேரில், த.மா.கா பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் மின்காஜ், மாவட்ட துணைத் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஹாஜா ஷெரீப், மாவட்டப் பொதுச் செயலாளரும், கும்பகோணம் நகர மன்ற 22-வது வார்டு உறுப்பினருமான கோவிந்தராஜன், மாவட்டப் பொதுச் செயலாளரும், சுவாமிமலை பேரூராட்சி மன்ற 15-வது வார்டு உறுப்பினருமான சங்கர், 10-வது வார்டு உறுப்பினர் தமிழரசி ராஜன், 6-வது வார்டு உறுப்பினர் மணிமேகலை, மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு 1-வது வார்டு உறுப்பினர் யோகவள்ளி, கும்பகோணம் ஒன்றியம், சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை, பாபநாசம் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு உறுப்பினர் ஹ.ஜார்ஜ் உள்ளிட்ட 52 பேர்களும்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருஞானசம்பந்தம், ஏற்பாட்டின் பேரில், த.மா.கா மாநிலச் செயற்குழு உறுப்பினர் முருகன் மற்றும் அக்கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஆத்மநாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் மல்லிகை வை.முத்துராமலிங்கம், ராஜா, மாவட்டச் செயலாளரும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக் குழு 1-வது வார்டு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்டப் பொதுச் செயலாளர் துரை மனோகரன், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், செருபாலக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சித.ராமசாமி, பட்டுக்கோட்டை ஒன்றியம், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபநாதன், பேராவூரணி ஒன்றியம், அம்மையாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட52 பேர்களும்,
 கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஸ்வரி ஏற்பாட்டின் பேரில், த.மா.கா-வைச் சேர்ந்த, மாநில துணைத்தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பானுமதி கருணாகரன், மாநிலப்பொதுச் செயலாளரும், சென்னை மாநகராட்சி, முன்னாள் மாமன்ற உறுப்பினருமான மாலினி ரமேஷ்கண்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் சுகந்தி நடராஜன், மாநிலச்செயலாளர் கே.ராதா, தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர். ஜாய்ஸ், திருவாரூர் மாவட்டத் தலைவர் பொன்னி கைலாசம் உள்ளிட்டநிர்வாகிகள் 30 பேர்களும்; ஆர்.எம். வீரப்பன் கட்சியைச் சேர்ந்த கட்சியைச் சேர்ந்த, தென் சென்னை மாவட்டச் செயலாளர்மதிவாணன் தலைமையில், வேலூர் மாவட்டச் செயலாளர் திரு. ஆம்பூர் சிவக்குமார்,தி.நகர் பகுதிச் செயலாளர் குமரி ஏ.நடராஜன், பகுதி இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர்  ஆனந்தன், ஈரோடு நகரச் செயலாளர் ஈரோடு செல்வம் உள்ளிட்ட 20 பேர்களும்,
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவரும், தமிழ்நாடு ராகுல்காந்தி நற்பணி மன்ற மாநிலச் செயலாளருமான உடையார் சோமசுந்தரம்தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் செயலாளர் பி.ஹரிபாபு, கொளத்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர்சதீஷ்குமார் உள்ளிட்ட 15 பேர்களும், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் முனியசாமி ஏற்பாட்டின் பேரில், ம.தி.மு.க-வைச் சேர்ந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர் கராத்தே எம்.பழனிச்சாமி, தி.மு.க-வைச் சேர்ந்த முதுகுளத்தூர் பேரூராட்சி முன்னாள் செயலாளர் கே.மோகன்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறுத்தைகள் கட்சியின் தமிழக உழவர் இயக்க மாநில துணை அமைப்பாளர் பாம்பூர் ம.இருளன், தி.மு.க-வைச் சேர்ந்த மேலச்செல்வனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேர்களும் தங்களைக் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னிலையில் அ.தி.மு.க.  சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை, எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றிய மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஆர்.செல்வன் அதேபோல், த.மா.கா. மாநில கொள்கை பரப்புச்செயலாளர் நத்தம் ஆ.ராஜகோபால், சின்னத்திரை நடிகை சு.நேத்ரா மேலும், காஞ்சிபுரம் மத்திய மாவட்டசெயலாளர் எஸ்.ஆறுமுகம் ஏற்பாட்டின் பேரில், தெற்கு மாவட்ட தேமுதிக-வைச் சேர்ந்த, மாவட்டச் செயலாளர் தங்கபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர் சொக்கலிங்கம், மாவட்ட மாணவர் அணிச்செயலாளர் அகஸ்டின் அன்பு, மாவட்டப் பிரதிநிதி குமார், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சரவணன், திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. பிரதிநிதி சிறுச்சேரி சங்கரன் முதலானோரும், வட சென்னை மேற்கு மாவட்ட த.மா.கா. மகளிர் அணித் தலைவர் நந்தினி கன்னியப்பன், தென் சென்னை மேற்குமாவட்ட த.மா.கா. மகளிர் அணித் தலைவர் வளசை ஆர்.உமா, தேனி மாவட்ட த.மா.கா. பொதுச் செயலாளர் பாண்டியராஜன், தென் சென்னை மாவட்ட விஜயகாந்த் மன்றச் செயலாளர் தசரா மா.முத்து, புதுடெல்லி மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அலுவலர் சிவப்பிரசாத், த.மா.கா. மாநில மாணவர் அணி பொதுச் செயலாளர் ஜெயராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட த.மா.கா. இளைஞர் அணி பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட த.மா.கா. இளைஞர் அணி முன்னாள் தலைவர் செந்தில்குமார், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் செல்வம் ஆகியோரும் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். ஆக மொத்தம், ஆக மொத்தம், 3500 மகளிர் உள்ளிட்ட 31,834 பேர் தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்