முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமீன் கேட்டு மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த ஆடி கார் ஐஸ்வர்யா

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, போதையில் கார் ஓட்டியதால் தொழிலாளி ஒருவர் பலியானது தொடர்பான வழக்கில், காரை ஓட்டிய ஐஸ்வர்யா ஜாமீன் கேட்டு மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முனுசாமி (வயது 45) என்பவர் கடந்த 2-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தரமணியில் கார் மோதி இறந்தார். குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்து மோதிய ஐஸ்வர்யா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், கீழ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 15-ம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி, ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன், அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து நேற்று மீண்டும் ஐஸ்வர்யா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக கிண்டி போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி, விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.போக்குவரத்து காவல்துறை ஆட்சேபம் தெரிவிக்காத பட்சத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago