முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்க்க ராம்குமாரை 8-ந்தேதி வீடியோ எடுக்கிறார்கள்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீடியோ ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்க்க ராம்குமாரை வருகிற 8-ந்தேதி வீடியோ எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர்.போலீஸ் பிடியில் சிக்கியதும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமாரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர், புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.சுவாதி கொலை வழக்கை விரைந்து முடித்து ராம்குமாருக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுக்க போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். ராம்குமார் தான் குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ள போலீசார், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது சுவாதியின் தந்தை மற்றும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருக்கும் நபர் ஆகியோர் ராம்குமாரை ஆடையாளம் காட்டினர். 3 நாட்கள் காவலில் எடுத்தும் ராம்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.சுவாதி கொலை வழக்கில் போலீசுக்கு முக்கிய ஆதாரமாக கிடைத்தது ராம்குமாரின் வீடியோ காட்சிகளை வைத்துதான் ராம்குமாரை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.இந்த வீடியோ காட்சிகளுடன், ராம்குமாரின் வேறு ஒரு வீடியோ காட்சியையும் ஒப்பிட்டு பார்த்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக ராம்குமாரை ஒரு நாள் காவலில் எடுத்து வீடியோ எடுக்க திட்டமிட்டனர். இதற்காக எழும்பூர் கோர்ட்டில் முறைப்படி மனுதாக்கல் செய்தனர்.இதனை விசாரித்த நீதிபதி வருகிற 8-ந்தேதி அன்று ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதித்து உத்தரவிட்டார்.இதன்படி, அன்றைய தினம் ராம்குமாரை போலீசார் காவலில் எடுக்கிறார்கள். பின்னர் அவரை வீடியோவில் பதிவு செய்து அந்த காட்சிகளை சி.டியாக போட்டு பின்னர் ராம்குமாரின் பழைய வீடியோவுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இதுவும் சுவாதி கொலை வழக்கு விசாரணைக்கு பெரிதும் உதவும் என்றுபோலீசார் நம்புகிறார்கள்.அதே நேரத்தில் இந்த உத்தரவு தொடர்பாக ராம்குமார் தரப்பு மேல் முறையீடு செய்யவும் நீதிபதி அனுமதி அளித்தார். இதனையடுத்து ராம்குமாரின் வக்கீல்கள் போலீஸ் காவல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் திட்ட மிட்டுள்ளனர்.இந்த மனு வருகிற திங்கட்கிழமை (ஆகஸ்டு 1/ந்தேதி) அன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்