முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் வேலை வாய்ப்பை உருவாக்குவேன் : ஹிலாரி கிளிண்டன் வாக்குறுதி

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவில் வேலை வாய்ப்பை உருவாக்கி பொருளாதாரத்தை உயர்த்துவேன் என ஹிலாரி கிளிண்டன் வாக்குறுதி அளித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கப்பட்டார். பிலாடெல்பியாவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியானது. நேற்று முன்தினம் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சி நடந்தது.
அதில் வேட்பாளராக அறிவிக்கபட்டதை ஹிலாரி கிளிண்டன் ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.  அவர் கூறியதாவது.,

தற்போது அமெரிக்க மக்கள் மீண்டும் எண்ணிப் பார்த்து சீர்தூக்கி முடி வெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் பிரித்தாளும் சக்தியாக திகழ்கிறார். நாடு முழுவதும் பிரிவினை என்ற பயத்தை மூட்டுகிறார். உலக நாடுகளில் இருந்து நம்மை ( அமெரிக்காவை) பிரிக்க நினைக்கிறார். இதன் மூலம் நாட்டுக்கு ஆபத்து உருவாகும். அனைவரது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்த நினைக்கிறார்.

நான் இங்கு எனது தாயின் மகளாக நிற்கிறேன். எனதுமகளுக்கு தாயாக இருக்கிறேன். இந்த நாளில் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். வெளிநாட்டினர்குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா–மெக்சிகோ இடையே தடுப்பு சுவர் கட்ட போவதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தீர்மானித்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இருநாடுகளின் எல்லையில் சுவர் ஏழுப்பமாட்டோம். மாறாக அனைவருக்கும் உரிய வேலை வாய்ப்பை உருவாக்கி நாட்டின் (அமெரிக்காவின்) பொருளாதாரத்தை உயர்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார். மேடையில் பேசிக் கொண்டிருந்த ஹிலாரி தனது குடும்ப பின்னணி குறித்தும்,தான் பதவியில் இருந்த போது நிகழ்த்திய சாதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

தனது மகள் செல்சியாவை மேடையில் ஏற்றி கட்சி தொண்டர்களிடம் அறிமுகப்படுத்தினார். எனது மிகவும் பெருமைக்குரிய மகள் என புகழாரம் சூட்டினார். அதேபோன்று செல்சியாவும் தனது தாயாரின் பெருமைகளை எடுத்துரைத்தார். கிளிண்டன்-ஹிலாரியை அன்பான பெற்றோர்கள் என புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்