முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் பயிற்சி ஆட்டம்: இந்திய ஹாக்கி அணி தோல்வி

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

மாட்ரிட்  - ஒலிம்பிக் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஆக்கி அணி 1–4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் அணியிடம் தோல்வி அடைந்தது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி அதற்கு முன்பாக ஸ்பெயின் அணியுடன் 2 பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது. இதில் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் மாட்ரிட்டில் நடந்தது. இதில் 1–4 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்திய வீரர் ரூபந்தர்சிங் 21–வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஸ்பெயின் தரப்பில் லியோநர்ட் (10, 31), குயிமடா (30, 42) தலா 2 கோல்கள் அடிததனர்.

இந்திய ஆண்கள் ஆக்கி அணி கடைசியாக 1980-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அந்த ஒலிம்பிக்கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த வி.பாஸ்கரன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

‘19 மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், நமது அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக்கையொட்டி இந்திய அணி குறைந்தபட்சம் 34 போட்டிகளில் விளையாடி தயாராகி இருக்கிறது. அணியினருடன் அதிக அளவில் உதவியாளர்கள் செல்வது நல்ல விஷயமாகும்.  அத்துடன் இந்த முறை கால் இறுதி ஆட்டம் முதல்முறையாக நடப்பது சாதகமான அம்சமாகும். ஒலிம்பிக்கில் ஆடிய அனுபவம் கொண்ட உத்தப்பா, சர்தார்சிங், ரகுநாத், ஸ்ரீஜேஷ், டேனிஸ் முஜ்தபா ஆகிய 5 வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பது நமக்கு அனுகூலமாகும். 

நமது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்க காரணம் எதுவுமில்லை. எளிதாக அரைஇறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இந்திய அணி நிச்சயம் பதக்கம் வெல்லும் என்று நம்புகிறேன். இந்திய பெண்கள் ஆக்கி அணியை பொறுத்தமட்டில் கால் இறுதி வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு வி.பாஸ்கரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்