முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான் வேட்டையாடிய வழக்கு : சல்மான் கான் விடுதலையை எதிர்த்து ராஜஸ்தான் அரசு மேல் முறையீடு

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர்  - மான்வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு மேல் முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோருடன் இணைந்து அந்த பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், சல்மான்கான் சுட்டதில் சின்காரா, கலைமான் வகைகளை சேர்ந்த 3 அரியவகை மான்கள் கொல்லப்பட்டன என்றும் அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் ஒன்றில் சல்மான்கானுக்கு ஓராண்டு சிறையும், மற்றொரு வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2006–ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதைஎதிர்த்து சல்மான் கான் தரப்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், போதிய ஆதாரங்களை அரசு தரப்பு சமர்பிக்கவில்லை என கூறி சல்மான் கானை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு வெளியான மறுநாளே, இந்த வழக்கில் ஒரே சாட்சியான சல்மான் கானின் ஜீப் ஓட்டுநர், சல்மான் கான் கார் ஓட்டுவதை நான் பார்த்தேன் எனவும் உரிய பாதுகாப்பு வழங்கினால் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொல்ல தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப்  காந்த் கதாரியா இது பற்றி கூறுகையில், சல்மான் கானுக்கு ஜீப் ஓட்டுநராக செயல்பட்ட நபரை தொடர்பு கொள்ள சிலரை அனுப்பியுள்ளதாகவும், தனக்கு பாதுகாப்பு தேவை என்று அவர் கூறினால், பாதுகாப்பை அவருக்கு வழங்குவோம்” என்றார். அதேவேளையில், சல்மான் கான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ராஜஸ்தான் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த விவகாரத்தில்  சல்மான் கானுக்கு புதிய  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago