முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சினை உள்பட முக்கிய பிரச்சினைகள் கடும் விவாதம்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாராளுமன்றத்தின் இரு அவைகளில் காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் கடும் விவாதத்தில் ஈடுபட்டன.  பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதங்கள் விவரம் வருமாறு,. லோக்சபையில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் ஆயுதப்படையினருக்கு தரம் குறைந்த ஆயுதங்கள் விநியோகப்படக்கூடாது என்கிற விஷயத்தில் உறுதியாக இருக்கிறோம் .மகாராஷ்டிராவில் வெடிப்பொருள் கிடங்கில் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டு 19பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், குறைபாடு உள்ள கருவிகளை அகற்றுவதில் ராணுவம் உரிய தர நிலையை கடைபிடிக்க ஆய்வு செய்கிறது.

வெடி பொருட்கள் கிடங்கு மிகவும் பாதுகாப்பான நிலையிலேயே உள்ளது. அதில் உள்ள பொருட்களால் ஏற்படும் அபாய வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ள வகையில் இருக்கின்றன. கோர்ட் உத்தரவின் படியே வெடிப் பொருட்கள் கிடங்கில் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் புல்கான் வெடி பொருள் கிடங்கில்  ஏற்பட்ட தீ விபத்தால்  ரூ7.90கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 19பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்புத்துறை கிடங்கில் வெடி பொருட்கள் வைக்கப்படும் தர நிலையை உயர்த்த ராணுவம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். லோக்சபையில் பா.ஜ.க.எம்.பி ஆர்.கே.சிங் கூறுகையில்,  இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவி வருகிறது. இதுபோன்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தர வேண்டும். பாகிஸ்தானில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானப்படை தள தாக்குதல், காஷ்மீர் வன்முறைகள் போன்றவற்றில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபடுகிறார்கள். இதைபோன்ற பாகிஸ்தான் ஆதரவு தாக்குதலுக்கு நாமும் பதிலடி தர வேண்டும் என்றார்.லோக்சபாவில், கேபினட் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி பேசுகையில்,  மகளிர் முன்னேற்றத்திற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது என்றார். கண்ணூர் எம்.பி. பி.கே. ஸ்ரீமதி (சி.பி.எம்) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மேனகா காந்தி இவ்வாறு பதிலளித்தார். ராஜ்ய சபை நேற்று கூடியதும் அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி மறைந்த அறிஞர் மகேஸ்வதா தேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவை உறுப்பினர்கள் ஒரு  நிமிடம் எழுந்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் காலை 11.6மணிக்கு அவைத்தலைவர் இருக்கையில் குரியன் இருந்தார்முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் போட்டார்கள். 

இந்த நிலையில் ராஜ்ய சபை மதியம் 12மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12.01மணிக்கு ராஜ்ய சபை மீண்டும் கூடியது. அப்போது தெலுங்கானா மாநிலத்தின் தெலுங்கு தேச கட்சியின் எம்.பி. சி.எம். ரமேஷ் பேசுகையில், விவசாயிகளின் வருமானத்தை பற்றி பேசாமல் வேளாண் உற்பத்தியை மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாக தனி பட்ஜெட்டை கொண்டு வருவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றார்.இதற்கு பதிலளித்த ராதா மோகன்  விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாக நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ராஜ்ய சபையில் கூறினார்..

ராஜ்ய சபையில் ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வெளிநடப்பு செய்தது. ராஜ்ய சபையில், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், ஆந்திர மாநிலத்திற்கு  அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இந்தியாவில் பல துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த முறை வெளிப்படையாகவே உள்ளது. இதில் அயல்  நாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பணியாற்றுவதற்கு உரிய இடமாக இந்தியா உள்ளது என்றார். என்றார். ஜெட்லி பதிலளித்துக்கெண்டிருக்கும் போது அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி எழுந்து பதில் பேச முயன்றார். அதற்கு அவை துணை தலைவர் குரியன் கூறுகையில், அவை விவாதத்தின் போது ஒரு அமைச்சர் பேசும் போது மற்றொரு அமைச்சர் குறுக்கிடுவது மிக அரிதான நிகழ்வு என சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார்.

ராஜ்ய சபையில் வலது கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா கொண்டு வந்த மரண தண்டனை குறித்த தீர்மானத்தை விவாதித்து அதனை அவை தள்ளுபடி செய்தது. பாராளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்