முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு அச்சுறுத்தல் : சுதந்திர தினத்தின் போது திறந்த வெளியில் நின்று பேச வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அறிவுரை

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி -  பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வரும் சுதந்திர தினத்தின் போது திறந்த வெளியில் நின்று பேச வேண்டாம் என பிரதமருக்கு பாதுகாப்பு முகமைகள் அறிவுறுத்தியுள்ளனர். சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் அங்கு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுவது மரபாக உள்ளது. சுதந்திர தின உரையை நிகழ்த்தும் பிரதமர்கள் வழக்கமாக குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் நின்று பேசுவது வழக்கம். ஆனால், பிரதமர் நரேந்திர  மோடி, தான் பொறுப்பேற்றதில் இருந்து மரபுகளை களைந்து திறந்த வெளியில் நின்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, சுதந்திர தினத்தன்று உரையாற்றும் போது, குண்டு துளைக்காத கூண்டினுள் இருந்து உரையாற்ற வேண்டும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனை பாதுகாப்பு ஆலோசகரிடம் உளவுத்துறை தெரிவித்துள்ளது என்றும், அவரது பாதுகாப்பு அறிவுரையை, மோடி அலட்சியப்படுத்த மாட்டார் என்பதால் அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காஷ்மீர் விவகாரம் மட்டுமின்றி, அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள், ஆங்காங்கே அதிகரித்து வரும் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டும், உளவுத்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையிலும் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத பாதுகாப்பு டெல்லியில் போடப்படவுள்ளது என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்