முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுஆயுதங்கள் விஷயத்தில் டிரம்ப்பை நம்ப முடியாது : ஹிலாரி கிளின்டன் சொல்கிறார்

சனிக்கிழமை, 30 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார். அணு ஆயுதங்கள் விஷயத்தில் அவரை நம்ப முடியாது’’ என்று ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் (68) அறிவிக் கப்பட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் பெண் ஹிலாரிதான். இந்நிலையில், பிலடெல்பியாவில் நிறைவடைந்த ஜனநாயக கட்சி தேசிய மாநாட்டில், அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டதை ஹிலாரி ஏற்றுக் கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான கட்சி பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.  அவர்கள் மத்தியில் ஹிலாரி பேசியதாவது:  தற்போது பொருளாதார பிரச் சினை, வன்முறைகள், தீவிரவாதம் போன்ற பல பிரச்சினைகளில் அமெரிக்கா சிக்கி உள்ளது. எனவே, நாம் ஒன்றிணைந்து செயல்பட போகிறோமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நாட்டை வலிமையானதாக்குவது நம்மிடம்தான் உள்ளது. 

அமெரிக்காவின் பொருளா தாரத்தை உயர்த்துவேன். அதன் மூலம் ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்கும் வேலை கிடைக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருவேன். குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார். எனவே, அணுஆயுதங்கள் விஷயத்தில் அவரை நம்ப முடியாது. சிறு பிள்ளைத்தனமாக செயல் படுகிறார். அமெரிக்கர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வருகிறார். நிருபர்கள் கடினமான கேள்விகள் கேட்டால் அமைதியை இழந்து ஆவேசப்படுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்ப் பாளர்களை கண்டால் கட்டுப் பாட்டை இழந்துவிடுகிறார்.

அப்படிப்பட்டவரை வெள்ளை மாளிகையில் அதிபராக்கினால், உண்மையான சிக்கல்கள், பிரச்சினைகள் ஏற்படும்போது அவர் எப்படி செயல்படுவார் என்று கற்பனை செய்து பாருங்கள். அவரால் முப்படைகளுக்கு தலைமை ஏற்று வழிநடத்த முடியுமா? உங்களை நீங்களே கேள்வி கேட்டு பாருங்கள். என்னை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ததை ஏற்றுக் கொள் கிறேன். நான் எல்லாக் கட்சி யினருக்குமான அதிபராக இருப்பேன். அமெரிக்கர்கள் எல்லோரும் வெற்றிபெற பாடுபடுவேன். இவ்வாறு கிளின்டன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்