முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பில் கிளின்டன் மற்றும் என்னைக் காட்டிலும் அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலாரி : பராக் ஒபாமா புகழாரம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - ‘‘என்னை விடவும், முன்னாள் அதிபர் பில் கிளின்டனை விடவும் அதிபர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் ஹிலாரி கிளின்டன்’’ என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டி பேசினார்.  அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிடுகிறார். இந்நிலையில், பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சி தேசிய கூட்டத்தில் ஹிலாரியை ஆதரித்து அதிபர் ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

அமெரிக்க ஆட்சியை தகுதிவாய்ந்த ஹிலாரியிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன். என்னை விடவும், முன்னாள் அதிபரும் அவரது கணவருமான பில் கிளின்டனை விடவும், மற்ற ஆண், பெண்களை விடவும் அதிபர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் ஹிலாரி. அமெரிக்க அதிபராக பதவி வகிப்பதற்கு ஹிலாரி மிகவும் தகுதி வாய்ந்தவர்.  குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் நம்பிக்கை இல்லாதவர்.

நமது ராணுவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார். அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நம்மிடம் இருப்பவர்களில் மிகச்சிறந்தவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அமெரிக்காவில் என்னுடைய அரசில் அமைச்சராக திறம்பட பணியாற்றியவர் ஹிலாரி. பதவி வகித்தால் என்னென்ன சிக்கல் எழும், அவற்றை எப்படி தீர்க்க வேண்டும் என்று தெரிந்தவர் ஹிலாரி. இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago