முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபையில் அடுத்த வாரம் ஜிஎஸ்.டி. மசோதா தாக்கல்

சனிக்கிழமை, 30 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பாராளுமன்ற ராஜ்யசபையில் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) அடுத்த வாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.  நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த 2015 மே மாதத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, 2016 ஏப்ரலில் இருந்து அமல்படுத்த திட்டமிடப்பட்டது.  ஆனால், மாநிலங்களவையில் இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா நிறைவேறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதில் உள்ள சில அம்சங்களில் திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே மசோதா நிறைவேறுவதற்கு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவுபெறுவதால், அனைத்து கட்சிகளிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இதையொட்டி வரும் ஆகஸ்ட் 1 முதல் ஒரு வாரத்துக்கான மாநிலங்களவை அலுவல் தொடர்பான பட்டியலை நாடாளு மன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வெளியிட்டார்.

அப்போது மாநிலங்களவையில் மீண்டும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் கருத்து கேட்கப்படும் என தெரிவித்தார். இதற்காக அரசியல் சட்டமைப்பு திருத்த மசோதாவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.  சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், மீண்டும் மக்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னர் சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்