முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் நிதி உதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனிக்கிழமை, 30 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு  ரூ.14 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.   இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு., 17.5.2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த  அண்ணாமலை என்பவரின் மனைவி பேபி, 18.5.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், வீரணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குள்ளு என்பவரின் மகன் சுப்ரமணியன், 20.5.2016 அன்று திருவாரூர் நகரம், காந்தி நகரைச் சேர்ந்த வள்ளிநாயகம் என்பவரின் மகன் கல்யாணசுந்தரம், மருதப்பாடி பகுதியைச் சேர்ந்தகோபால் என்பவரின் மகன் முருகையன், 26.5.2016  அன்று காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பழைய சீவரம்  கிராமத்தைச் சேர்ந்தமீனாட்சிசுந்தரம் என்பவரின் மகன் ஞானமூர்த்தி, 31.5.2016 அன்று மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், பி.பி.குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் செல்வன்  மணிகண்டன், 1.6.2016 அன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கள்ளிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின்  மனைவி எல்லம்மாள், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம்,  பாகசாலை கிராமத்தைச் சேர்ந்த மகந்த் என்பவரின் மனைவி ஷர்மிளா, 2.6.2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி ஜெயா ஆகியோர் பல்வேறு விபத்துகளில்  உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,

24.5.2016 அன்று திண்டுக்கல்  மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஜம்புதுரைக்கோட்டை கிராமம்,  ஜல்லிப்பட்டி பிரிவு தேசிய நெடுஞ்சாலை அருகே, விருதுநகர்  மாவட்டத்தைச் சேர்ந்த ஆவுடைநாயகன் என்பவரின் மகன் நல்லதம்பி, 5.6.2016 அன்று புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம்,  நார்த்தாமலை சரகம், ஸ்ரீநார்த்தாமலை முத்துமாரியம்மன்  திருக்கோவில் வளைவு அருகே புதுக்கோட்டையிலிருந்து  திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்த வேனும், அறந்தாங்கி சென்று  கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம்  செய்த, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஓட்டுநர் ரஜீவன்,  கிருபா,  சஜிதா  மற்றும்  ஜீவகாரணி ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்  என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 14  நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்,

அவர்களின்  குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு  லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago