முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் உடல் நலக்குறைவால் மரணம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

பிரசல்ஸ்  - கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் பெல்ஜியம் நாட்டிக்கு சென்றிருந்த போது, திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 21-ம் தேதி பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றார். உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் மியூசிக் திருவிழாவில் பங்கேற்க சென்றிருப்பதாக அவருடன் சென்ற நண்பர்கள் பேஸ்புக் மூலம் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், பெல்ஜியத்தில் ராகேஷுக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அன்ட்வெர்ப் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பெல்ஜியம் சென்ற இடத்தில் ராகேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் முதல்வர் சித்தராமையாவின் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மகனை பார்ப்பதற்காக சித்தராமையா வியாழக்கிழமை அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராகேஷ், நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் மரணம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்