முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.1.93 காசுகள் உயர்வு

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன.இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 01 காசுகளும் குறைக்கப்பட்டன.இந்த நிலையில், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.1.93 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருமாதத்தில் இரண்டாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வின் மூலம், 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை தற்போது டெல்லியில் 423.09 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை 1 ஆம் தேதி மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ. 1.98 காசுகள் உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்