முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேசத்தில் சோனியா காந்தி இன்று பிரசாரம்

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,  உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (செவ்வாய்)வாரணாசியில் தனது பிரச்சாரத்தை  தொடங்குகிறார்.

 உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்  இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ், பா.ஜ.க.  ஆகிய 4 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் பிரச்சாரத்தை துவக்கும் . ஆனால் தற்போது நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை யொட்டி பல மாதங்கள் முன்னதாக காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை துவக்குகிறது.

 உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்  வரவிருக்கும்  2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு உதவியாக இருக்கும் என காங்கிரஸ் கருதுகிறது. எனவே காங்கிரஸ் கட்சி தற்போதே பிரச்சாரத்தில் தீவிரம் காட்டத்துவங்கியுள்ளது. ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள சோனியா காந்தி அங்கு முதல் நபராக பிரச்சாரத்தை துவக்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக அவர் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியை குறி வைத்து பிரச்சாரத்தை துவக்குகிறார்.

சோனியா காந்தி இன்று, உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரமான வாரணாசியில்  சாலையோரப்பிரச்சாரத்தை துவக்குகிறார்.  கடந்த 2ஆண்டுகளில் அந்த தொகுதியில் பிரதமர் மோடி பெரிய அளவில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் அமல்படுத்த வில்லை என்பதை முன்னிறுத்தி சோனியா பிரச்சாரம் செய்கிறார்.

 இந்த பிரச்சாரம் மூலம் இப்போதே வாக்காளர்களின் மனதில் இடம் பிடித்துவிட முடியும் என அவர் நம்புகிறார். அவரது பிரச்சாரத்தை இணைய தளங்களில் வெளியிட காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே பனாரஸ் நகரின் வலி என்ற தலைப்பில், இணைய தளத்தில் வீடியோ பதிவுகளை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் பிரதமர் மோடியைபொது மக்கள்  குறை சொல்லும் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. இந்த இணைய தள பிரச்சாரத்திற்கு பதிலடி தர பா.ஜ.கவும் தயாராகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்