முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்தது

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ஒரு சவரன் ரூ.23,936-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் (ஜூலை) 30-ம் தேதி உச்சகட்டமாக ரூ.344 அதிகரித்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 40 ஆனது. இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் ரூ.24 ஆயிரத்தை கடந்தது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போதும் தங்கம் விலை தொடர்ந்து அதே அளவில் தான் இருந்து வருகிறது.

இதற்கிடையே செவ்வாய் கிழமை தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்து 152 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.216 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 936 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.27 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2992-க்கு விற்கிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிரச்சனையில் இன்னும் சராசரி நிலை திரும்பவில்லை. அதனால் தங்கம் விலை தொடர்ந்து நிலையற்ற நிலையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1145 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 515 ஆக உள்ளது. ஒருகிராம் ரூ.51.90-க்கு விற்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்