முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.23,720-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.288 குறைந்து திடீர் சரிவை சந்தித்துள்ளது. சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை கடந்து விற்றது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்து 912 ஆக இருந்தது. நேற்று ரூ.96 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 8-க்கு விற்றது. இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.288 குறைந்தது.

ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 720 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.36 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,965-க்கு விற்கிறது .பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பால் தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1610 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 255 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.50-60-க்கு விற்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago